4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு,
(பிரியா நர்சரி பள்ளி அருகில்) கிருஷ்ணாபுரம் காலனி,
மதுரை-14. அலைபேசி: 99440 02365
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- தனுசு.
10-12-2018- மகரம்.
12-12-2018- கும்பம்.
15-12-2018- மீனம்.
கிரக பாதசாரம்:
சூரியன்: கேட்டை- 2, 3, 4.
செவ்வாய்: பூரட்டாதி- 2, 3.
புதன்: விசாகம்- 4, அனுஷம்- 1, 2.
குரு: அனுஷம்- 4.
சுக்கிரன்: சுவாதி- 2, 3.
சனி: மூலம்- 3.
ராகு: பூசம்- 1, புனர்பூசம்- 4.
கேது: உத்திராடம்- 3, 2.
கிரக மாற்றம்:
குரு அஸ்தமனம்.
13-12-2018- சனி அஸ்தமனம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
மேஷ ராசிநாதன் செவ் வாய் 11-ல் இருக்கிறார். அவருக்கு வீடு கொடுத்த சனி அவரைப் பார்க்கிறார். அதனால், 8-ல் மறையும் சூரியன், புதன், குரு இவர்களின் தீய பலன்கள் குறையும் என்று எதிர்பார்க்கலாம். குரு 8-ல் வந்தபோதுதான் வாலி பட்டமிழந்தான். அதேபோல, 10-ல் உள்ள கேது உங்கள் பதவி அல்லது தொழில் வகையில் சில சங்கடங்களையும் பாதிப்புகளையும் உருவாக்கலாம். 10-க்குடைய சனி 9-ல் இருப்பதால் தர்மகர்மாதிபதி யோகம் ஏற்படலாம். அதனால் மற்ற கிரகங்களின் பாதிப்புகளை சமாளிக்கலாம். 7-ல் உள்ள சுக்கிரன் ஆட்சி பெறுவதால், கணவருக்கு மனைவியாலும், மனைவிக்கு கணவராலும் ஆதரவும், சகாயமும், ஒத்துழைப்பும் ஏற்படும். அதனால் உங்கள் வாழ்க்கைப்பயணம் தேக்கமில்லாமல் பயணிக்கும். குடும்பம் என்ற வண்டிக்கு கணவரும் மனைவியும் இரண்டு சக்கரங்களாகும். அவை திருப்தியாக இருப்பதால் வாழ்க்கை துன்பமின்றி இன்பமாக அமையும். 4-ஆமிடத்து ராகு உங்களுக்கோ தாயாருக்கோ ஆரோக்கியக்குறைவு அல்லது சங்கடங்களை ஏற்படுத்தினாலும், குரு பார்ப் பதால் கவலைப்படத் தேவையில்லை. அதேசமயம் ராகு தசாபுக்திகள் நடந்தால் மட்டும் அவசியம் பரிகாரம் செய்துகொள்ளவும். வசதி இருப்பவர்கள் சூலினிதுர்க்கா ஹோமம், திருஷ்டிதுர்க்கா ஹோமம், தன்வந்திரி ஹோமம், நவகிரக ஹோமம் செய்துகொள்ளவும். வசதி குறைந்தவர்கள் வடக்குப் பார்த்த அம்மனுக்கு ராகு காலத்தில் நெய்தீபமேற்றி வழிபடவும்.
ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 6-ல் மறைந் தாலும் ஆட்சி பெறுவதால் தோஷமில்லை. சுக்கிரன் 3-ல் உள்ள ராகு சாரம் பெறுகிறார். 8, 11-க்குடைய குரு 7-ல் அமர்ந்து ராசியைப் பார்க்கிறார். குரு பார்க்க கோடி நன்மை. அத்துடன் குரு 11-ஆமிடம், ஜென்ம ராசி, 3-ஆமிடம் ஆகியவற்றைப் பார்க்கிறார். ரிஷப ராசிக்கு அட்டமத்துச்சனி நடந்தாலும் அதன் பாதிப்புகள் நூற்றுக்கு நூறு விலகும். சோதனைகளை விலக்கி சாதனைகளைப் படைக்கலாம். அத்துடன் குருவுக்கு வீடு கொடுத்த செவ்வாயும் ராசியைப் பார்க்கிறார். எனவே கஜா புயல் வருவதற்கு முன்னதாகவே முன்னேற் பாடாக பாதுகாப்புப் பணிகளைச் செய்து உயிர்ச்சேதங்களைத் தவிர்த்துபோலவும், பொருட் சேதங்களுக்கு நிவாரண உதவிகளைச் செய்வதுபோலவும் உங்களுக்கு உதவிகளும் நன்மைகளும் கிடைக்கும். அட்டமத்துச்சனி ஒருசிலருக்கு இடமாற்றம், தொழில்மாற்றம், ஊர் மாற்றங்களை ஏற்படுத்தலாம். அப்படிவரும் மாற்றங்கள் ஏற்றமான மாற்றமாகவும், முன்னேற்றத்திற்கு அஸ்திவாரம் போடுவதுமாதிரியும் அமையும். உடன்பிறந்தவர்களின் உதவியும் ஒத்துழைப்பும் உங்களுக்கு மனநிறைவினை உண்டாக்கும். சொத்து விவகாரங்களினால் ஏற்பட்ட குழப்பங்களுக்கும் பிரச்சினை களுக்கும் இப்போது நல்ல தீர்வு கிடைக்கும். அது மனதுக்கு திருப்தி யாகவும் அமையும். திருமணமா காதவர்களுக்குத் திருமண யோகமும், வாரிசு இல்லாதவர்களுக்கு வாரிசு யோகமும் அமையும்.
மிதுனம்
(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)
மிதுன ராசிக்கு 7, 10-க்குடைய குரு 6-ல் இருக்கிறார். 7-ஆமிடத்துக்கு 12-லும் 10-ஆமிடத்துக்கு 9-லும் அமர்ந்து 10-ஆமிடத்தையும், 12-ஆமிடத்தையும், 2-ஆமிடத்தையும் பார்க்கிறார். 10-க்குடையவரே 10-ஆம் இடத்தைப் பார்ப்பது பலம். அதனால் பதவி, தொழில், உத்தியோகம், வாழ்க்கை இவற்றில் பாதிப்புகளுக்கு இடமில்லை. கடந்த காலத்தில் தொழில்துறையில் நஷ்டமடைந்தவர்களுக்கும், உத்தியோகத்தில் பிரச்சினைகளை சந்தித்தவர்களுக்கும், வேலை- வருமானம் எதுவுமில்லாமல் வீண்பொழுது போக்கியவர்களுக்கும் தற்போது அற்புதமான காலம். நல்ல தொழில், நல்ல வருமானம், நல்ல வேலை, நல்ல சம்பளம், நல்ல மனைவி, நல்ல மக்கள், நல்ல குடும்பம், நல்ல மகிழ்ச்சியான வாழ்க்கை எல்லாம் அமையும். 6-ல் உள்ள குரு மேற்கண்ட நல்ல காரியங்களுக்காக உங்களைக் கடனாளி ஆக்கலாம். அப்படிக் கடன் ஏற்பட்டாலும், மனிதாபிமானம் உள்ளவர்களிடம் குறைந்த வட்டிக்கு வாங்கும் சுபக்கடனாகவும் அமையும். கந்துவட்டிக்காரர்களிடமிருந்து ஒதுங்கி விடலாம். 7-ல் உள்ள சனி மனைவி வகையால் அனுகூலங்களும், ஆதாயங் களும், நன்மைகளும் அடையச் செய்வார். குருவும் சூரியனும் ஒன்றுகூடி இருப்பதால் அரசு வேலைக்கு முயற்சி எடுப்பவர் களுக்கு அல்லது அரசுத் தேர்வு எழுது பவர்களுக்கு இப்போது கிரீன் சிக்னல் ஒர்க் அவுட்டாகும். ஏற்கெனவே அரசு வேலையில் இருப்பவர்களுக்கு விரும்பிய பதவி உயர்வும், இடமாற்றமும் எதிர்பார்க்கலாம்.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)
கடக ராசியில் ராகு இருப்பதும், 7-ல் கேது நிற்பதும் உங்களுக்கு ஒரு மைனஸ் பாயின்ட்தான் என்றாலும், பாக்கியாதிபதி குரு 5-ல் நின்று ராசியைப் பார்ப்பது ப்ளஸ் பாயின்ட் ஆகும். மேலும், நவதிரிகோணாதிபதி பஞ்சம திரிகோணம் பெற்று 9-ஆம் இடத்தைப் பார்ப்பது விசேஷம். எனவே செய்யும் தொழிலிலும், பார்க்கும் வேலையிலும் ஓய்வு ஒழிச்சல் இல்லாமல், அதிக பிரயாசையும், டென்ஷனும் ஏற்பட்டாலும் உழைப்புக்கேற்ற ஊதியமும், திறமைக்கேற்ற பெருமையும் அடையலாம். அதுதான் குரு பார்த்த பெருமை. அத்துடன் 4-ல் ஆட்சிபெறும் சுக்கிரன் 10-ஆம் இடத் தைப் பார்ப்பதால், செய்வதைத் திருந்தச் செய்து சிறப்படையலாம். மேலிடத்தாரின் பாராட்டுக்குப் பாத்திரதாரியாகலாம். சிலருக்கு பூமி, வீடு, வாகன யோகம் அமையும். ஏற்கெனவே வாகனம் வைத்திருப்பவர்கள் (கடன் வாங்கி வாகனம் வாங்கியவர்கள்) இக்காலகட்டத்தில் எல்லாக் கடன்களையும் அடைத்து (இஎம்ஐ), வாகனத்தை சொந்தமாக்கிக்கொள்ளலாம். ஒருசிலர் பழைய வாகனத்தைக் கொடுத்து புதிய வாகனம் வாங்கிக்கொள்ளலாம். உங்களுக்கும், குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் தேக ஆரோக் கியம் தெளிந்த நீரோடையாகத் திகழும். 6-ஆமிடத்து சனி மனைவி பெயரிலோ பிள்ளைகள் பெயரிலோ டெபாசிட் சேமிப்பு செய்யும் வாய்ப்பு உண்டாகும். 6-ஆமிடம் என்பது தொழில் ஸ்தானமான 10-ஆமிடத் துக்கு பாக்கிய ஸ்தானம். நல்லதே நடக்கும்.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)
சிம்ம ராசிநாதன் சூரியன் 4-ல் 2, 11-க்குடைய புதன் சாரத்தில், புதனோடு சம்பந்தமாக இருக்கிறார். அவர்களுடன் 5-க்குடைய குருவும் சம்பந்தம். 3-க்குடைய சுக்கிரன் ஆட்சியாக இருக்கிறார். 5-ல் சனியும் இருக்கிறார். சனி 6-க்குடையவர். குரு 8-க்குடையவர். இருவரும் அஸ்தமனம் என்பதால், கெட்ட ஆதிபத்தியம் பெற்ற கிரகங்கள் கெட்டுப்போவதால், "கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' என்ப தற்குச் சமமான பலன்களைத் தருவார்கள். 8-க்குடையவரே 8-ஆமிடத்தைப் பார்ப் பதால், மனக்குழப்பமும் தேவையற்ற கற்பனை பயமும் உருவாகுமே தவிர, அபகீர்த்தி, கேவலம், கெடுதிக்கு இடம் வராது. 10-க்குடைய சுக்கிரன் 9-ஆம் இடத்தைப் பார்ப்பதால் தர்மகர்மாதிபதி யோகம் ஏற்படுகிறது. அத்துடன் திரிகோணாதிபதியான குரு 4-ல் கேந்திரம் பெறுவதும் ராஜயோகம். இவையெல்லாம் உங்களுக்கு அனுகூலமான பலன்களாகும். அதிர்ஷ்டகரமான திருப்பங் களை ஏற்படுத்தும். குருவருளும் திருவருளும் பெருகும். இந்த உலகத்தில் எல்லாப் பிரச் சினைகளையும் சமாளித்து முன்னேறவும் வெற்றி பெறவும்- ஒன்று படைபலம் வேண்டும் அல்லது பணபலம் வேண்டும். இந்த இரண்டும் இல்லாத நிலையில் தெய்வபலம் இருந்தால் போதும். பணபலமும் படைபலமும் இருந்த வர்கள் தமது அடாவடிச் செயல்களால் இன்று சிறையில் வாடுகிறார்கள் என்றால் தெய்வபலம் இல்லையென்று அர்த்தம்!
கன்னி
(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)
கன்னி ராசிநாதன் புதன் 3-ல் சூரியன், குருவோடு சம்பந்தம்; ராசிக்கு 3-ல் மறை கிறார். அவர் 10-க்குடையவர் என்பதால், 10-க்கும் 6-ல் மறைகிறார். 4, 7-க்குடைய குரு வோடும், 12-க்குடைய சூரியனோடும் சம்பந்தம். அர்த்தாஷ்டமச்சனி நடப்பதால் ஆரோக்கியக்குறைவு, பொருளாதார நெருக்கடி, கௌரவப் போராட்டம், தொழில்துறை சங்கடங்கள் இவற்றையெல்லாம் சந்திக்கும் நிலை காணப்படலாம். என்றாலும் வாழ்க்கைப் பயணமும், தொழில் பயணமும் தொடர்ந்து செயல்படும். தேக்கம் இருக்கலாமே தவிர தடை இருக்காது. ஸ்பீடு பிரேக் உள்ள இடத்தில் நிதானித்துப் பயணம் போக வேண்டும். பாலம் வேலை நடக்கும் இடத்தில் "டேக் டைவர்ஷன்' என்பதுபோல மாற்றுப்பாதையில் வாகனம் போகும். முன்பின் நேரமானாலும் போய்ச் சேர வேண்டிய இடத்தைப் போய்ச் சேரலாம் என்பதுபோல, உங்கள் கனவுகளும் திட்டங் களும் இறுதியில் உறுதியாக நிறைவேறும். தொழில் கூட்டாளிகள் அல்லது நண்பர்கள் ஆதரவால் காரியங்களை கச்சிதமாக நிறைவேற்றலாம். 6-ஆம் இடத்துச் செவ்வாய் கடன் நிவர்த்தி, நோய் நிவர்த்தி, சத்ரு ஜெயம் ஆகிய பலன்களை உருவாக்கும். அதுவே தொழில் ஸ்தானத்துக்கு 9-ஆமிடம் என்பதால் தொழில்துறையில் புதுமுயற்சிகள் வெற்றி யுடையும். முன்னேற்றம் உண்டாகும்.
துலாம்
(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)
துலா ராசிநாதன் சுக்கிரன் ஜென்மத்தில் ஆட்சியாக இருக்கிறார். 10-ல் உள்ள ராகுவின் சாரம் பெறுகிறார். எனவே, வாழ்க்கை, தொழில் இவற்றில் உங்கள் செயல்பாடுகள் சிறப்பாக அமையும். நினைத் ததை சாதிக்கலாம். எண்ணியதை ஈடேற்றலாம். 4-ல் கேது. 10-ல் ராகு. இரண்டும் கேந்திர ஸ்தானங்கள். அதில் பாவகிரகங்கள் அமர்வ தால் எல்லாம் திருப்தியாக அமையும். தேக ஆரோக்கியத்தில் தெளிவான நிலை உருவாகும். 2, 7-க்குடைய செவ்வாய் 5-ல் நின்று, அவருக்கு வீடு கொடுத்த சனியால் பார்க்கப்படுவதால், மனைவிமக்கள் வகையில் நற்பலன்கள் நடைபெறும். அவர்கள் விருப் பங்களையும் நிறைவேற்றி வைப்பீர்கள். திருமணமாக வேண்டியவர்களுக்குத் திருமணம் நடைபெறும். வாரிசு வேண்டு வோருக்கு வாரிசு யோகம் அமையும். பூமி, வீடு, மனை, வாகனம் போன்ற யோகங் களும் அமையும். அதற்கான சுபக்கடன் களும் கிடைக்கும். கடன் தவணைகனை எல்லாம் தடையில்லாமல் அடைக்கலாம். கட்டடம் கான்டிராக்ட், புரமோட்டர்ஸ், ரியல் எஸ்டேட் போன்ற தொழில்துறையில் உள்ளவர்களுக்கு தற்காலம் பொற்காலமாகும். நம்பிக்கையும் விடாமுயற்சியும் வெற்றி வாய்ப்பைத் தரும். அதிர்ஷ்ட தேவதையின் அரவணைப்புக்கு ஆளாகலாம். வாக்கு நாணயத்தைக் காப்பாற்றலாம். வரவு- செலவு தாராளமாக இருக்கும்.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)
விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 4-ல் அமர்ந்து 7-ஆமிடம், 10-ஆமிடம், 11-ஆம் இடங்களைப் பார்க்கிறார். 7-ஆமிடத்துக்கு சூரியன், புதன், குரு பார்வையும் கிடைக் கிறது. 7-க்குடைய சுக்கிரனும் 12-ல் ஆட்சி பெறுகிறார். திருமணத்தடை விலகும். திருமணத்தையும், புத்திர பாக்கியத்தையும் எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்கு இக்காலம் திருமணயோகமும், புத்திர யோகமும் உண்டாகும். விருச்சிக ராசிக்கு பாதச்சனி நடக்கிறது. இதுவரை மங்கு சனியாக சங்கடங்களைச் சந்தித்தவர்களுக்கு இனி பொங்கும்சனியாக பொலிலிவைச் சந்திக்க லாம். அதேசமயம் சந்திரதசையோ சந்திர புக்தியோ நடந்தால் துன்பங்கள் தொடர் கதையாக நடக்கும். அப்படிப்பட்டவர்கள் எளிய பரிகாரமாக திங்கட்கிழமைதோறும் சிவலிலிங்கத்திற்கு பாலாபிஷேகம் செய்ய வேண்டும். வசதி படைத்தவர்கள் ருத்ர ஹோமம் வளர்த்து, சுவாமிக்கு ருத்ராபி ஷேகம் செய்யலாம். செவலூரில் பூமிநாத சுவாமி கோவிலிலில் 108 சங்கு வைத்து முறையாகப் பூஜை செய்யப்படும். ஏழரைச் சனியின் பாதிப்பு குறைய, அவரவர் வயதுடன் ஒரு எண்ணிக்கை சேர்த்து, அத்தனை மிளகுகளை சிவப்புத் துணியில் திரிபொட்டலமாக்கி, சனிக்கிழமை தோறும் காலபைரவர் சந்நிதியில் நெய்தீபமேற்றி வைக்கலாம். ஆஞ்சனேயரையும் வழிபடலாம்.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)
தனுசு ராசிநாதன் குரு 12-ல் மறை கிறார். ஜென்மச்சனி நடக்கிறது. ஜாதக ரீதியாக சாதகமான தசாபுக்தி நடப்பவர்களுக்கு ஜென்மச்சனியும், விரயகுருவும் பாதிக்காது. கெட்ட நேரத்திலும் நல்ல நேரம் என்பது போல நன்மைகள் நடக்கும். ராகு, கேது, சனி போன்ற தசாபுக்தி நடப்பவர்களுக்கு மட்டும் அலைச்சல், டென்ஷன், ஏமாற்றம், இழப்பு, வீண்விரயம் போன்ற பலன்களை சந்திக்க நேரும். மற்றவர்கள் கவலைப்பட வேண்டாம். ராசிநாதன் குரு 4-ஆமிடம், 6-ஆமிடம், 8-ஆமிடங்களைப் பார்ப்பதால், ஒருசிலர் பூமி, வீடு, வாகனம் சம்பந்தமான சுபச் செலவுகளைச் செய்வதோடு, அதற்காக கடன் களும் வாங்கலாம். அந்தக் கடன்களும் சுபக் கடன்கள் என்பதால், குறிப்பிட்ட காலத்தில் அடைக்கலாம். ஒருசிலர் ஒத்தி வீடு அல்லது காலிலிமனை அல்லது சொந்தவீடு போன்ற திட்டங்களில் முதலீடு செய்யலாம். தேக ஆரோக்கியத்தில் சிறுசிறு சங்கடங்கள் வந்தாலும், பாதிப்புக்கு இடமிருக்காது. 8-ஆமிடத்து ராகு தொழில்துறையில், உத்தியோகத்தில் டென்ஷனை ஏற்படுத் தினாலும், குரு பார்ப்பதால் எல்லாவற்றையும் எளியமுறையில் சமாளித்துவிடலாம். குரு பார்க்கக் கோடி நன்மை என்பது உங்களுக்கு நூற்றுக்கு நூறு பலிலிதமாகும். வேலை சம்பந்த மாக வெளிநாட்டு ஆர்வங்கள், விருப்பங்கள் உருவானாலும் காலதாமதமாகலாம்.
மகரம்
(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)
மகர ராசிநாதன் சனி 12-ல் மறைகிறார்; குரு வீட்டில் இருக்கிறார். சனியும் குருவும் அஸ்தமனம். ஜென்ம கேது, சப்தம ராகு- இவையெல்லாம் உங்களுக்கு எதிர்மறைப் பலன்களை நடத்தும். நினைத்தது ஒன்று; நடப்பது ஒன்று என்று இருக்கும். அதேசமயம், 5-ஆமிடத்தை தைரிய ஸ்தானாதிபதி குரு பார்ப்பதாலும், 5-க்குடைய சுக்கிரன் 10-ல் ஆட்சிபெறுவதாலும் எது நடந்தாலும், பகவத் கீதையில் சொன்ன மாதிரி அது நன்றா கவே நடக்கும். உங்கள் நன்மைக்காகவே அமையும். விரும்பியது கிடைக்காவிட்டால், வருத்தப்படாமல் கிடைத்ததை வைத்து திருப்தியடைய கற்றுக்கொள்ளுங்கள். வருத்தமும் திருப்தியும், இன்பமும் துன்பமும் வெளியிலிலிருந்து வருவதில்லை. உங்கள் மனதுக்குள்ளேயே அமைகிறது. ஏழரைச்சனியில் விரயச்சனி நடப்பதால், சிலசமயம் உங்களுக்கு எதிர்மறைப் பலன்களாகவும், தாமதப் பலன் களாகவும்தான் நடக்கும். அது நீங்கள் வாங்கிவந்த வரம். அது நிரந்தரமான பாதிப் பல்ல. தற்காலிகலிமான தடையே, பாதிப்பே என்று மனதை சாந்திப்படுத்திக் கொள்ளுங்கள். நாளை நடப்பதெல்லாம் நல்லதாகவே நடக்கும். உற்றவர்களாலும், மற்றவர்களாலும் குடும்பத்தில் குழப்பம் ஏற்படலாம். அதற்கு இடம் கொடுக் காமல் நடந்துகொள்வது அவசியம். அதுதான் உங்களுக்கு முறையான பரிகாரம்.
கும்பம்
(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)
கும்ப ராசிநாதன் சனி 11-ல் இருக்கிறார்; தன் ராசியைப் பார்க்கிறார். செல்வாக்கு, சாதுர்யம், திறமை, கௌரவம் இவற்றுக்கு எந்த பாதிப்பும் வராது. 3, 10-க்குடைய செவ்வாய் ஜென்ம ராசியில் இருப்பதாலும், குரு சாரம் பெறுவதாலும் எதையும் சிந்தித்துச் செயல்படுவீர்கள். திட்டமிட்டு செயல்படுவீர்கள். வள்ளுவர் சொன்னதுபோல எண்ணித் துணிக கருமம் என்பதற்கிணங்க முன்கூட்டியே ஆய்வுசெய்து, திட்டமிட்டு, முறையாகச் செயல்படுவதால் எல்லாவற்றிலும் வெற்றியடையலாம். 9-ல் ஆட்சிபெறும் சுக்கிரன் அதற்கு இணைவாக குருவருளும் திருவருளும் கிடைக்கச் செய்வார். இதைவிட வெற்றிக்கு வேறென்ன தேவை! 4-ஆமிடத் தையும், 6-ஆமிடத்தையும், 2-ஆமிடத்தையும் குரு பார்ப்பதால், பூமி, வீடு, வாகனம் சம்பந்தமான கனவுத்திட்டங்கள் கைகூடும். அதற்கான சுபக்கடன்கள் கிடைக்கும். ஏற்கெனவே கடன் வாங்கியிருந்தாலும் அவை நாணயமாக அடைபடும். சிலர் பழைய கடன்களை அடைத்துப் புதிய கடன்களை வாங்கலாம். படிப்பவர்களுக்கு கல்விக்கடன் கிடைக்கும். பட்டப்படிப்பு முடிந்ததும் வேலை கிடைக்கும். அதை வைத்துக் கல்விக்கடனை நாணயமாக அடைக்கலாம். ஒருசிலர் வெளிநாட்டு வேலைக்காக கடன்வாங்கிப் போகலாம். அங்கு கைநிறைய சம்பாதித்து அந்தக் கடனையும் அடைத்து சொந்த வீடுவாசலும் வாங்கலாம். கேதசுகமும் ஆரோக்கியமும் கைகொடுக்கும்.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
மீன ராசிநாதன் குரு 9-ல் நின்று உங்கள் ராசியைப் பார்ப்பது மிகச்சிறப்பு. குரு 10-க்குடையவர். அவர் 9-ல் இருப்பது தர்மகர் மாதிபதி யோகம். எனவே, உங்கள் வாழ்க்கையிலும், தொழில் அமைப்பிலும் நற்காலம் பொற்காலமாகும். தொட்ட தெல்லாம் துலங்கும். கேட்டதெல்லாம் கிடைக்கும். விட்டதெல்லாம் வந்துசேரும். குருவுக்கு வீடு கொடுத்த செவ்வாய் 12-ல் மறைந்தாலும், அவருக்கு வீடு கொடுத்த சனி, குரு வீட்டில் நின்று செவ்வாயைப் பார்ப்பது சிறப்பு. கடந்த காலத்தில் உங்க ளோடு சிரித்துப்பேசி, முதுகுக்குப் பின்னால் வக்கணை காட்டியவர்கள் இனி, வழிதெரி யாமல் விழிபிதுங்கி ஒதுங்கப்போவது உறுதி. ஐந்தாம் படை வேலை பார்த்தவர்கள் எல்லாம் வெந்து நொந்து நூலாகிவிடுவார்கள். ஒரு மனிதனுக்கு கெட்ட நேரம் ஆரம்பிக்கும்போது, கெட்டவர்கள் எல்லாம் ஒட்டிக்கொள் வார்கள்; நல்லவர்கள் ஒதுங்கிவிடுவார்கள். இப்போது உங்களுக்கு நல்ல நேரம் ஆரம்பம். ஒட்டிக்கொண்டிருக்கும் கெட்டவர்கள் எல்லாம் விலகிப்போய்விடுவார்கள். விலகியிருக்கும் நல்லவர்கள் எல்லாம் விரும்பிவந்து கைகொடுப்பார்கள். தொட்டது துலங்கும். விரும்பியது நடைபெறும். தேகம் நலம்பெறும். செல்வாக்கு பெருகும். வாழ்க்கை வளம்பெறும். கடன்கள் எல்லாம் காணாமல் போய்விடும். வருமானம் பெருக வழிவகை உருவாகும்.